தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நமிதா. இவர் பிக் பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் நெருக்கமானார். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு வீரா என்பவரை திருப்பதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நமிதாவின் கணவர் வீரா, சின்னதிரையில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இது ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “சோட்டி சர்தானி” என்ற தொடர். இப்போது, தமிழ் தழுவலாகி ’உயிரே’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகிறது.
வித்தியாசமான கதைக்களத்தில் மிகவும் அழகான கதையாக உயிரே இருக்கும் என நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.