அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் கல்லூரியில் சிறுதானிய உணவு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவில் பச்சைப்பயிறு, சுண்டல், கொண்டகடலை அவியல், கேழ்வரகு, கம்பு, திணை அடை, வரகு அரிசி உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட உணவு பதார்த்தங்களை மாணவர்கள் தயார் செய்து பார்வையாளர்களை அசத்தினர். இதில் சிறந்த உணவு வகைகளை சிறப்பு பார்வையாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு வழங்கினார். உணவு திருவிழாவில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து சிறுதானிய உணவுகளை அறிந்து கொண்டனர்.