சிறு, குறு விவசாயிகளுக்கு 3 ஆயிரம் ஓய்வூதியம் மோடி தொடங்கி வைத்தார்

சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள் மற்றும் இரண்டரை ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உருவாக்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி கிஷான் மான் – தன் யோஜனா என்ற ஓய்வூதிய திட்டத்தை, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களால், 8 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள் என தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக 10ஆயிரத்து 774 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வயதை கடந்த பின், விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். நாட்டின் நலனுக்காக பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் காஷ்மீரில் வளர்ச்சியை கொண்டு வருவோம் என பிரதமர் தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து 38 ஆயிரம் விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version