திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், 5 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிராமப்புற பகுதியில் உள்ள பெண்களிடம், சிறுதொழில் மையங்களின் மூலம் கடன் பெற்றுத் தருவதாக, 5 பேர் கொண்ட கும்பல், பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் 5 கோடி ரூபாய் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கடன் பெற்று புதிய தொழில் துவங்கலாம் என முயற்சி செய்யும் நபர்களை கண்டறிந்து, அவர்களிடம் நூதன முறையில் பல்வேறு அரசு முத்திரைகளைக் கொண்ட ஆவணங்களை காட்டியும், அவர்கள் வரும் வாகனத்தில், தமிழ்நாடு அரசு என ஸ்டிக்கர் ஒட்டியும் ஏமாற்றியுள்ளனர். ஒவ்வொரு தனி நபரிடமும் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை இந்தக் கும்பல் மோசடி செய்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் காங்கேயத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமியிடம் புகார் மனு அளித்தனர்.