சாண்ட்விச் திருடிய சுலோவேனியா எம்.பி.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுலோவேனியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் தர்ஜ் கிரஜ்சச். இவர் சுலோவேனியா தலைநகரான லியூப்லியானவில் உள்ள ஒரு கடைக்கு சாண்ட்விச் சாப்பிட சென்றார். அங்கு சென்றவரை அக்கடையில் வேலைப் பார்க்கும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடுப்பான கிரஜ்சச் அங்கிருந்து வெளியே செல்ல முடிவு செய்தார். அதற்குமுன் கடையில் இருந்த சாண்ட்விச்-ஐ யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றார்.

இதன் காட்சிகள் கடையில் இருந்த CCTV கேமராவில் பதிவானது. அவர்மீது கடையின் உரிமையாளர் சாண்ட்விச் திருடியாக புகார் அளித்தார். இதற்கு பதிலளித்த கிரஜ்சச், ” நான் சாப்பிட சென்றபோது யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. கடையில் எல்லோரும் அலார்ட்டாக இருக்கிறார்களா என்பதை சோதனை செய்யவே அப்படி செய்தேன் என்றும் கூறினார். ஆனால் அதற்கான தொகையை தான் கொடுத்து விட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கிரஜ்சச் செய்த இச்செயலை ஏற்க முடியாது என்று அந்நாட்டு நாடாளுமன்றம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது . இதனால் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

Exit mobile version