இடையர்பாளையத்தில் மருத்துவரின் அனுமதிச் சீட்டு இன்றி தூக்க மாத்திரை விற்பனை

போதைக்காக சட்டவிரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த மருந்தக உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். தனியார் மருந்தகத்தில் போதைக்காக பயன்படுத்த, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தூக்கமாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இடையர்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருந்தகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், 3 ரூபாய் 40 காசு மதிப்புள்ள தூக்க மாத்திரையை, 50 ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மருந்தக உரிமையாளர் மதனவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version