மனிதர்களின் ஆரோக்கியம் அவர்கள் உண்ணும் உணவில் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஒரு சராசரி மனிதனின் ஆரோக்கியம் உணவில் மட்டுமல்ல. அவர்களின் தூக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் அமெரிக்காவின் நேஷனல் சிலிப் பவுண்டேசன் ஆராய்ச்சியாளர்கள். ஆம்! ஆரோக்கியத்தின் அறிகுறியே நல்ல தூக்கம் தான்.
ஒவ்வொரு மனிதனும் தினமும் குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும் எனவும், 11 மணி நேரம் கடந்து தூங்குவது மனிதனின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஒரு மனிதன் இரவு படுத்தவுடன் முதல் 30 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும். இரவில் ஒரு முறையாவது தூக்கத்தில் இருந்து எழுபவர்களுக்கு அடுத்த 20 நிமிடங்களுக்குள் ஆழ்ந்த தூக்கம் வரும். இந்த இரண்டும் தான் தூக்கத்திற்கான அளவு. இந்த அளவுகள் தொடர்ந்து மாறுபட்டு இருப்பின் நம் உடலில் ஏதோ பாதிப்பு பின்னாளில் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
அதேபோல் வயதுக்கேற்ற தூக்கம் என்றும் ஒரு வரம்பு இருக்கிறது. அதில் கூறியுள்ளபடி சராசரியாக ஆழ்ந்து தூங்கும் மனிதர்கள் தன்னுடைய வேலைகளில் மிகவும் சுறுசுறுப்புள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இளம் பருவத்தில் நன்றாக தூங்கி எழுபவர்கள் வயதான காலத்தில் ஆரோக்கியமானவர்களாகவும், அறிவுடையர்களாகவும் இருப்பார்கள் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
எனவே தூங்குவது முக்கியமல்ல. நன்றாக ஆழ்ந்து தூங்க வேண்டும்.