ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற கோபி கிருஷ்ணன் என்பவர் ஏடிஎம் கார்டு சொருகும் இடத்தில், ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு கோபி கிருஷ்ணன், தகவல் கொடுத்ததை அடுத்து மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அயனாவரத்திலும், திருவள்ளூரிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்தது தெரிய வந்தது. தீவிர விசாரணையில், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி, இர்பான், அல்லா பாஸ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த கும்பல் ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளை அடித்தது எப்படி என்பது குறித்து காவல்துறை அதிகாரி ஆரோக்கிய ரவீந்தின் செய்துகாட்டி விளக்கம் அளித்தார்.