அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு அரசு தாட்கோவும், தனியார் அறக்கட்டளையும் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தன. ஆறு மாதங்களாக அளிக்கப்பட்டு வந்த பயிற்சி நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற நிறைவு விழாவில், மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த பல நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற 90 சதவீத மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version