நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவலர் தாக்கியதில் மனமுடைந்த சிவனடியார் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் அருகே புளியம்பட்டி குண்டாங்ல் காடு பகுதியில் வசித்து வந்த சிவனடியார் சரவணன் , இறை வழிபாடு, தம்மை நாடி வருவோருக்கு பிரார்த்தனை செய்வது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.. அமாவாசை தினங்களில், பக்தர்களுக்கு தாயத்துகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி சரவணன் பூஜையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கே வந்த, காவலர் அந்தோணி மைக்கேல் என்பவர் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.. இதனால், மனமுடைந்த சிவனடியார், தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பாக, தம்மை தாக்கியது போலீஸ்காரர் அந்தோணி மைக்கேல் தான் எனவும், தன் ஆன்மா அவரை சும்மா விடாது எனவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், காட்டுப் பகுதி ஒன்றில் சரவணனின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக தேவூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.