அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் பராமரிப்பில்லாமல் இருந்த சோழர் கால சிவலிங்கத்தை மீட்டு பொதுமக்களின் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி – தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணியின் போது குளக்கரையை ஒட்டி சாலையின் ஒதுக்குபுறமாக சிவலிங்கம் ஒன்று இருந்துள்ளது.
இந்த சிவலிங்கமானது மழையில் நனைந்தபடி, மண்மூடி கேட்பாரற்று சாலையின் ஓரத்தில் இருந்துள்ளது வேதனையளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
அந்த இடத்தை சீரமைத்து பொதுமக்கள் வழிபட வசதிகளை செய்துதருமாறு சிவனடியார்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.