#SK13 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இவரா தங்கை?

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர்,பாடகர் என பல்வேறு பன்முகத்தை வெளிப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.

முந்தைய படமான சீமராஜா தோல்வியை தொடர்ந்து அடுத்தப் படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். “Mr.Local” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் வேலைக்காரன் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

 

ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் சதீஷ் ஆகியோரும் இப்படத்தில் இணைகிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தங்கையாக “SK 13″ல் யூ-டியூப் தொடரான “எருமசாணி” மூலம் பிரபலம் ஆனா ஹரிஜா சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதுவரை சிவகார்த்திகேயன் படங்களில் அனிருத், இமான் ஆகியோர் இசையமைத்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஹிப் ஹாப் ஆதி உடன் இணைகிறார்.இதனால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று 5 மணிக்கு வெளியிடப்படும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Exit mobile version