சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் கனா திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியீடு

சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரித்திருக்கும் கனா திரைப்படம், டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்த சிவகார்த்திகேயன், கனா என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற உள்ள ஒரு பாடலை, சிவகார்த்திகேயனும், அவருடைய மகளும் பாடுவது போல் வெளியான மேக்கிங் வீடியோ, யூ ட்யூபில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version