சிவகங்கையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா திறந்து வைத்தார்.
கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதி வேட்பாளருமான ஹெச். ராஜா, சிவகங்கை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாஸ்கரன், அமமுகவுக்கு சின்னம் வழங்கியது குறித்த கேள்விக்கு, அந்த சின்னத்தை பற்றியெல்லாம் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றும், தொண்டர்களே இல்லாததால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என கூறினார்.