உதகையில் உள்ள சூட்டிங் மட்டம் பகுதி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசன் களைகட்டும். இந்த ஆண்டும் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இடமாக சூட்டிங் மட்டம் என்றழைக்கப்படும் பகல்கோடு மந்து உள்ளது. வெட்டவெளியாக பரந்து காணப்படும் இந்த பகுதியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. செங்குத்தான இப்பகுதியில் பாம்பு போன்ற நடை பாதையில் சுற்றுலா பயணிகள் மேலே ஏறிச் செல்வது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதுமையான அனுபவமாக
உள்ளதாக கூறுகின்றனர்.
மலையின் மீது ஏறி சென்று பார்த்தால் அருகில் இருக்கும் அனைத்து தோடர் இன கிராமங்களை கண்டு ரசிக்க முடிகிறது. அதோடு குளிர்ந்த காற்றையும், இயற்கை காட்சிகளையும் ரசிப்பது சுற்றுலா பயணிகளுக்கு சுகமான அனுபவமாக உள்ளது.
உதகைக்கு கேரளா மற்றும் கர்நாடகவிலிருந்து வரும் பிரதான சாலையில் இந்த சுற்றுலா தளம் இருப்பதால், சுற்றுலா பயணிகளின்
கூட்டம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.