தற்போது சமூகவலைத்தளங்களில் பல மீம்களை கடந்து செல்கிறோம் அந்த வகையில் ஒரு பூனையின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது, அந்த பூனை பற்றி தெரிந்து கொள்வோம் இந்த தொகுப்பில்…
சமூக வலைதளங்களில் தினசரி பல மீம்களை நாம் கடந்து செல்கிறோம்.அரசியல் , சினிமா , டிக் டாக் சேட்டைகள், கல்லூரியில் நடக்கும் காமெடிகள் என மீம் கிரியேடர்ஸ் தினமும் ஒரு செய்தியினை பிடித்து, நம்மை சிரிக்கவைத்துக்கொண்டேதான் இருக்கின்றனர். டிரெண்ட் எதுவும் இல்லைஎன்றால், அவர்களே ஒரு செய்தியினை டிரெண்ட் ஆக்கிவிடுகின்றனர்.
அப்படி, கடந்த சில மாதமாக சர்வதேச அளவில் அதிகம் டிரெண்டான ஒரு மீம் டெம்ப்ளேட் ஒன்று இருக்கிறது. அதை நாம் ஏதாவது ஒரு மீம் பக்கத்தில் நிச்சயமாக கடந்திருப்போம். பெண் ஒருவர், ஒரு வெள்ளைப் பூனையைப் பார்த்து ஆவேசமாக கை நீட்டி கத்துவதுபோலவும் அதற்கு அந்தப் பூனை, தனக்குப் பிடிக்காத காய்கறிகளை உணவாக வைத்ததை எண்ணி வருத்தத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்து “இந்த அம்மா எதுக்கு நம்மளைப் பார்த்து இப்படி கத்திக்கிட்டு இருக்காங்க” என்று அப்பாவித்தனமாக ஒரு பார்வை பார்க்கும். இது பல சோஷியல் மீடியாவில் மீம்கள் வலம்வந்தது.
மீம்களில் உலக அளவில் வலம் வந்த பூனை இரு வேறு இடத்திலிருந்து ஒன்றாகச் சேர்க்கப்பட்ட இரண்டு பூனைகள் எனபதே உண்மை.
இடப்பக்கத்தில் கத்திக்கொண்டிருக்கும் பெண்ணின் பெயர், டைலர் ஆம்ஸ்ட்ராங். 2011ல் வெளிவந்த “The Realhousewives of the Beverly Hills” என்னும் அமெரிக்க தொடரில் வரும் காட்சி அது.
மற்றொருபூனையின் பெயர் ஸ்மட்ஜ் (Smudge).கனடா நாட்டைச் சேர்ந்த ஸ்மட்ஜின் இத்னுடைய புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பற்றி அதன் உரிமையாளர் மிரண்டா, “ரொம்ப பாசக்கார பூனை பாஸ் அது , . தினமும் எங்களுடன் தான் உணவு அருந்தும். ஸ்மட்ஜ் உட்கார தனியா நாற்காலி ஒண்ணு குடுத்துருவோம். அப்படி குடுக்கலனா நேரா டேபிள் மேல ஏறி எங்களைச் சாப்பிடவே விடாது. அப்படி ஒருநாள் அதுக்கு நாற்காலி போட மறந்துபோக, அது வேற ஒருத்தரோட சீட்டில் ஏறி உட்கார்ந்து, எதிரே உள்ள தட்டில் தனக்குப் பிடிக்காத காய்கறிகள் இருப்பதைக் கண்டு அப்பாவியாய் ஒரு லுக் விடும். அப்போது எடுக்கப்பட்டதுதான் அந்த புகைப்படம் ஆகும்
இந்த இரு புகைப்படங்களும் ட்விட்டரில் வெளியாகி இரண்டரை லட்சத்திற்கு மேலான லைக்குகள் பெற்று வைரல் ஆனது. இதனால், ஓரேநாளில் உலக அளவில் பிரபலமான ஸ்மட்ஜ் தனியாக சமூக வலைத்தளத்தில் தனக்கென ஒரு பக்கம் வைத்துள்ள ஸ்டட்ஜ் பூனையின் பல போட்டோக்களை அப்லோட் செய்யபட்டது. தற்போது அந்தபக்கத்தை 12 லட்சத்திற்கும் மேலானவர்கள் பின் தொடர்கின்றனர். மேலும், ஸ்மட்ஜின் புகைப்படங்கள் அடங்கிய டி-ஷர்ட்டுகள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் போன்றவை மார்க்கெட்டில் ஹிட் அடித்துவருகின்றன.
இந்தப் புகழ், டிரெண்ட் எதுவுமே தெரியாமல் தினம்தினம் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு இன்னைக்காவது தனக்கு பிடித்த சாப்பாடு கிடைக்கதா? என அப்பாவியாக போஸ் கொடுக்கிறது ஸ்மட்ஜ்.