ஆத்திரத்தில் அக்காவை குத்தி கொலை செய்த தம்பி

சென்னையில் மதுபாட்டிலை மறைந்து வைத்த அக்காவை, தம்பி ஆத்திரத்தில் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த தாரகேஸ்வரி என்ற பெண் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது தம்பி குகதாசன் இலங்கையில் வசித்து வந்துள்ளார். சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த குகதாசன், கோயிலுக்கு சென்று விட்டு தாரகேஸ்வரி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். மது அருந்தும் பழக்கம் உள்ள குகதாசன், மது பாட்டிலை வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார். இரவு நேரத்தில் மதுபாட்டிலை தேடிய போது, கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தாரகேஸ்வரி மதுபாட்டிலை எடுத்து மறைத்து வைத்துள்ளதாக குகதாசன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த குகதாசன், அக்காவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்கச் சென்ற தாரகேஸ்வரி மகன் ஆதிசேசன், பாட்டி வேதநாயகி ஆகிய இருவரையும் கத்தியால் வெட்டியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து தாரகேஸ்வரி உடலை மீட்ட காவல்துறையினர், குகதாசனை கைது செய்தனர். காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version