தலைநகர் டெல்லி மற்றும் கோவாவில், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 73வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, வரும் காந்தி ஜெயந்தி முதல், நாடு முழுவதும், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் தடை குறித்து பிரதமர் மோடி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தலைநகர் டெல்லியில் இன்று முதல், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவா மாநிலத்திலும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அக்டோபர் 2 முதல், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அமலுக்கு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனமும் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.