singles -யை காதல் ஜோடியாக்கும் சீன ரயில் – கதறும் இந்திய 90’s kids..

90’s கிட்ஸ், சிங்கிள் பசங்க என இங்கே பேசி வரும் சூழலில், சீனாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, சிங்கிள்களுக்கு தனியே ரயில் விடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பு……

மக்கள் தொகையில் உலகிலேயே முதலாவது இடத்தில் உள்ள நாடு சீனா. சீனாவில் 1970ஆம் ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ஒரே குழந்தைத் திட்டத்தால், பெரும்பாலான பெற்றோர், அதை ஆண் குழந்தையாக பெற்றுக் கொள்ள விரும்பி, பெண் சிசுக்களை கருவிலேயே அழித்தனர். அதன் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் 3 கோடி சீன ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் போனது. கடந்த ஆண்டு கணிப்பின் படி, சராசரியாக ஆயிரம் இளைஞர்களில் சுமார் 7 பேருக்குத்தான் திருமணமானது.

இது நாட்டின் வளர்ச்சியையும், மனித வளத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்த சீனா 2016-ல் ஒரே குழந்தை என்ற திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. தம்பதியினர் தங்களது விருப்பத்திற்கு ஏற்றார் போல் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சீனாவின் மக்கள் தொகை கனிசமாக அதிகரித்தது.

மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, ரயில்வே திட்டங்களிலும் பல புதுமைகளை புகுத்தி வருகிறது சீனா, அந்தவகையில், புல்லட் ரயில், உலகிலேயே அதிவிரைவு ரயில் என பல புது புது தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியது.

தற்போது, காதல் வயப்படாத singles களுக்கான பிரத்யேக காதல் ரயிலை கடந்த 3 வருடங்களாக இயக்கி வருகிறது. 10 பெட்டிகள் கொண்ட இந்த காதல் ரயிலில் திருமணமாகாத ஆண், பெண் என ஆயிரம் காதல் வயப்படாதவர்கள் பயணிக்கின்றனர். 2 பகல் ஒரு இரவு பயணிக்கும் இந்த ரயிலில், உணவு உள்ளிட்டவை ரயிலிலேயே வழங்கப்படுகிறது. நீண்ட பயணம் செல்லும் இந்த ரயிலில், தங்களுக்கான ஜோடியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காகவே, சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த ரயில் சந்திப்பு மூலம் அறிமுகமாகும் நபர்கள் பயணத்தில் புரிந்து கொள்வதோடு, அதன் பின்பும் உறவை நீட்டித்து, சரியாக இருக்கும் பட்சத்தில் திருமண பந்தத்தில் இணைகின்றனர். இதுவரை 3 ஆண்டுகளில் விடப்பட்ட ரயிலில் 10 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டதாக இந்த காதல் ரயிலை ஏற்பாடு செய்த செங்க்டு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொஞ்ச காலம் வாழும் வாழ்க்கையில், வெறுமைக்கு இடம் கொடுக்காமல், மகிழ்ச்சியை கூட்டி, வாழ்க்கையை வாழ்வோம் என்கிறார்கள்…. பயணங்கள் ஓய்வதில்லை ரயில்வே துறையினர்…

 

Exit mobile version