வழக்கு நிலுவையில் உள்ளதால் 18தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதன் காரணமாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றார். எனவே, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 

Exit mobile version