ஆடி மாதம் தொடங்கியதால் பழங்கள், பூக்களின் விற்பனை குறைந்திருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எப்போதும் பரபரப்பாகவும், வாகன நெரிசல்களிலும் சிக்கித்தவிக்கும் கோயம்பேடு சந்தை கடந்த சில தினங்களாக கலையிழந்து காணப்படுகிறது. ஆடி மாதம் தொடங்கியதையடுத்து பழம் மற்றும் பூக்களில் வியாபாரம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆடி மாதங்களில் பெரும்பாலும் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தப்படாததால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் குறைந்துள்ளதாகவும், வியாபரம் சரிந்துள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மாம்பழம், தர்பூசணி, ஆப்பிள் போன்ற பழங்களின் சீசனும் முடிவதால் பழங்களின் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.