குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிம்ஸ் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 1847-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிம்ஸ் பூங்கா ஆரம்ப காலத்தில் குன்னூரில் வசிப்பவர்களுக்கும், வருகை தருபவர்களுக்கும் பொழுது போக்கிடமாக இருந்தது. காலப்போக்கில் தாவரவியல் பூங்காவாக செயல்பட ஆரம்பித்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இயற்கையில் அரிதாக காணப்படும் தாவர வகைகளும், பொருளாதார முக்கியத்துவம் பெற்ற தாவரங்களும் இங்கு நடவு செய்யப்பட்டது.
சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ள இப்பூங்காவில் ஆன்டிரினம், பெகோனியா, குட்டை ரக சால்வியா, மேரி கோல்டு உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பூக்கள், மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த செடிகளும் இங்கு பாரமரிக்கப்பட்டு வருகிறது.