சிக்கலான காதலுக்கு சிம்பிள் தீர்வு!!

ஒரு இளைஞனை திருமணம் செய்ய இரண்டு காதலிகள் போட்டிபோட்டதால், பதறிப்போன கிராம பஞ்சாயத்து, டாஸ்போட்டு மணப்பெண்ணை தேர்வு செய்த விநோத சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. சினிமாவே மிஞ்சும் சிக்கலான காதலுக்கு சிம்பிளாக தீர்வு கண்ட கதையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு…. 

ஒரே நபரை இரண்டு பெண்கள் காதலிப்பது, ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து மன்மதன் போல் ஹீரோ சுற்றுவதை நாம் சினிமாவில் பார்த்திருப்போம். அப்படி ஒரு காதல் சம்பவத்தில் சிக்கிய மன்மதன் தான் இந்த இளைஞன்…..

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜில்லா பஞ்சாயத்தை சேர்ந்தவர் தான் இந்த 90ஸ் கிட்ஸ். 27 வயதான இவருக்கு, பக்கத்து கிராமத்தில் உள்ள 20 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. 90 கிட்சுக்கு ஒரு பெண் நட்பு கிடைத்தால் போதும், அந்த பெண்ணை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்ற கற்பனை வாழ்க்கையை போன்று, அந்த 90 கிட்ஸ் இளைஞனும் இரவு, பகல் பாராமல் அந்த பெண்ணிற்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தந்துள்ளார். ஆறு மாதத்திலேயே இவரது நட்பு காதலாக மாறியது. பின்னர், இவரும் அவ்வப்போது வெளியே ஒன்றாக சுற்றுவது, சினிமா, ஷாப்பிங் என நீண்ட நேரம் ஒன்றாக செலவிட்டுள்ளனர்.

6 மாத காலத்திற்கு முன்பு இதே இளைஞருக்கு வேறு ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார். பிரேமம் நிவின் பவுலி போல தாடியுடன் வலம் வந்த இந்த சுட்டி இளைஞர் மீது அந்த பெண்ணுக்கும் காதல் வர, ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் ஒருவருக்கு தெரியாமல் மற்றவருடன் பழகி வந்துள்ளார். இரண்டு பெண்களும் தங்கள் காதலன், மற்றொரு பெண்ணை காதலிப்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஒரு நாள் இந்த விஷயம் அவர்களுக்கு தெரிய வர காதலன் தனக்கு தான் சொந்தம் என இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

((இளைஞர் வீட்டில் காதலுக்கு சம்மதம் சொல்லாமல், அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க நினைத்திருக்கின்றனர். தங்களது காதல் கதையை இரண்டு பெண்களும், வீட்டிலும் சொல்லியுள்ளனர். பின்னர் இரு பெண்கள் வீட்டிலிருந்தும் தனித்தனியாக இளைஞர் வீட்டிற்கு சென்று அவர்களின் காதல் விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.)) விடாப்படியாக காதல் கல்யாணத்துக்கு இளைஞரின் பெற்றோர் மறுப்பு தெரிவிக்க ஜோடி காதல் பஞ்சாயத்து சென்றுள்ளது.

காதலை கதையை கேட்டு பதறிப்போன பஞ்சாயத்தார், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண ஊர் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். அந்த பஞ்சாயத்தில், காதல் மன்னன் யாரை திருமணம் செய்ய விரும்பிகிறார்? என கேள்வி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த இளைஞர் பதில் சொல்லவேயில்லை. ((இரு பெண்களும், அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்வேன் என சிறுபிள்ளை போல அடம்பிடித்தனர். இறுதியாக பஞ்சாயத்து முடிவே அறிவிக்கப்பட்டாமல் ஒரு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. ))

இளைஞனை மறுக்க முடியாத அந்த இரண்டு பெண்களில் ஒருவர் தான் விரும்பிய காதலன் தனக்கு கிடைக்கவில்லை என நினைத்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். நல்ல வேளையாக அவர் விஷம் குடித்ததை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மருத்துமவனையில் சேர்த்து காப்பாற்றினர்.
ஒரு மாதத்திற்கு பிறகு 2வது முறையாக பஞ்சாயத்து கூடியது. ஆனால், இந்த முறை மூன்று குடும்பத்தாரிடமும், ஒரு வக்கீலை வைத்து இந்த பஞ்சாயத்தில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது என்று கூறியதோடு மட்டுமின்றி காவல்துறை, நீதிமன்றம், ஊடகங்கள் என எதற்கும் செல்லக்கூடாது என மூன்று குடும்பத்தாரிடம் எழுதி வாங்கப்பட்டது.

((பஞ்சாயத்தில் மீண்டும் ஒருமுறை அந்த இளைஞருக்கு யாரை திருமணம் செய்ய விரும்புகிறார் என சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறையும் டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் திருதிருவென விழிக்கும் மாணவனை போல, பதில் சொல்ல மறுத்துவிட்டார். சரியென்று)) ஒரு முடிவுக்கு வந்த பஞ்சாய்த்து, வேறு வழி தெரியாமல் டாஸ் போட்டு தீர்மானிப்பது என முடிவு செய்தனர். தலை விழுந்தால் ஒரு பெண்ணும், பூ விழுந்தால் ஒரு பெண்ணும் என முடிவு செய்யப்பட்டு டாஸ் போடப்பட்டது.

டாஸில் தற்கொலைக்கு முயன்றே பெண்ணே வெற்றி பெற்றார். அவரையே திருமணம் செய்து வைக்க பஞ்சாயத்து முடிவு செய்தது. இந்த தீர்ப்பை பார்த்த அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். இறுதியாக தனக்காக உயிரைவிட தயாரான பெண்ணை திருமணம் செய்தார் அந்த இளைஞர். டாஸில் தேர்வான பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்த மற்றொரு பெண், காதலித்த இளைஞரின் கன்னத்தில் அறைந்துவிட்டு நடையை கட்டினார்.

 

Exit mobile version