கொந்தகை அகழாய்வில் ஒரே வடிவிலான குறியீடுகள் கொண்ட மட்கலன்கள் கண்டறியப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், ஒரே வடிவிலான குறியீடுகள் கொண்ட மட்கலன்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணுவியல் துறை பேராசிரியரும் தலைவருமான குமரேசன்
தலைமையில் கடந்த 23ஆம் தேதி முதல், கொந்தகையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழியில் இருந்து எலும்புகள் சேகரிக்கப்பட்டன.

அப்போது சில தாழிகளில் எலும்புகளுடன் ஒரே வடிவிலான குறியீடுகளுடன் கருப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முழுமையான ஆய்வுக்குபின் இந்தக் குறியீடுகள் எதைக் குறிக்கின்றன என்பதும், மட்கலன்களின் தொன்மையும் தெரியவரும் என அகழாய்வு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version