கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழக அரசு மற்றும் மெலிண்டா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் 3 புள்ளி 61 மில்லியன் டாலர் நிதி உதவி அளித்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பகுதிகளில் உள்ள கசடுகளை அகற்றும் பணிகளுக்கான காலத்தை நீட்டிக்க சம்மதித்தது. இதனையடுத்து காலநீட்டிப்பை அனுமதித்து அந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கையெழுத்திட்டார். இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பகுதிகளில் உள்ள கசடுகள் அகற்றும் பணிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அலுவலர்கள் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version