காரைக்கால் அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து வரும் 13-ம் தேதி மருத்துவமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனை தரமற்று இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், காரைக்கால் அரசு மருத்துவமனையின் அவலநிலையை கண்டித்து மருத்துவமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளார்.