பாஜக தலைவர் அமித்ஷா உடன் கர்நாடக தலைவர்கள் சந்திப்பு

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மாநில பாஜக தலைவர்கள் குழு, பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கர்நாடக மாநில பாஜக தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, அரவிந்த் லிம்பாவனி, மாதேசாமி ஆகியோர் நேற்றிரவு டெல்லி சென்றனர். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை இன்று காலை சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, முதலமைச்சர் தேர்வு, அமைச்சரவை பட்டியல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை அவர்கள் சந்திக்கின்றனர்.

Exit mobile version