ஊதியத்தை வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், நகராட்சி ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி தொகை 6 கோடியே, 58 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டிவனம் நகராட்சியில் தூய்மைப் பணிக்காக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், 172 ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி தொகை 6 கோடியே 58 லட்சம் ரூபாயை கட்டாமல் மோசடி செய்துள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியத்தை உடனே வழங்கவும், வருங்கால வைப்பு நிதித் தொகையினை செலுத்தவும் கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

உடனடியாக தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணாவிட்டால் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

 

Exit mobile version