தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி நடைபெற்ற சித்தமருத்துவ கண்காட்சியை ஏராளமானோர் கண்டு பயனடைந்தனர். தேசிய சித்த மருத்துவ தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற சித்த மருத்துவ கண்காட்சியை மாவட்ட சார் ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில், இயற்கை உணவுகள், பாரம்பரிய மருத்துவம், மூலிகைகளின் பயன்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி மருந்து பெட்டிகளை சார் ஆட்சியர் வழங்கினார்.