கிருஷ்ணகிரியில், சொத்து தகராறில், சித்தப்பாவையும், சித்தியையும் வெட்டிக் கொலை செய்த இரு இளைஞர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைச்சிருக்காங்க…
கிருஷ்ணகிரி வீரப்பன் நகரைச் சேர்ந்தவர் 55 வயதான புகழேந்தி. இவர், மரங்களை இழைக்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பப்பி ராணி. புகழேந்திக்கும் அவரது அண்ணன் இளங்கோவிற்கும் இடையே, நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வந்ததுள்ளது. இதனால், இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில், இளங்கோவின் மகன் லோகேஷும், அவரது நண்பர் சதீஷும் சேர்ந்து, கடந்த 5-ம் தேதி 2.30 மணியளவில் புகழேந்தியின் வீட்டிற்கு சென்று தகராரில் ஈடுப்பட்டனர்.
வாக்குவாதம் கைலப்பாக மாற, ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர் சதீஷ், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், புகழேந்தியையும், பப்பி ராணியையும் சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் இருவரும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தடுக்க முயன்ற எதிர்வீட்டை சேர்ந்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கொலையான தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும், இந்த கொடூர கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தம்பதியை கொலைசெய்த லோகேஷ், அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும், கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில், கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம், கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Discussion about this post