பாகிஸ்தானுக்கு எந்தவித நிதியுதவியும் வழங்க கூடாது என ஐஎம்எப் அமைப்பை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் அமைப்பு பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்தநிலையில் வாஷிங்டன்னில் நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதிநிதிகள், சர்வதேச நிதியுதவியை தவறாக பயன்படுத்தும் பாகிஸ்தானுக்கு ஐஎம்எப் நிதியுதவி வழங்க கூடாது என வலியுறுத்தினர். மேலும் அமெரிக்க உள்ளிட்ட 38 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி7 கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வில் சர்வதேச நிதியுதவியை பயங்கவரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவது உறுதிச் செய்திருப்பதாக இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.