அரசின் குளறுபடிகளால், பொதுமக்கள் தினமும் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டாலும், அரசின் குளறுபடிகளாலும், பொதுமக்கள் தினமும் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர் கதையாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக காலை முதல் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

தடுப்பூசி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் நின்றிருக்க, திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக கூறி தடுப்பூசி மையத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் கொட்டும் மழையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

சென்னை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தில் செயல்படும் தடுப்பூசி மையத்தில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கே, இரண்டாம் தவணை செலுத்த நாட்களை கடத்துவதால் தடுப்பூசி மீதான நம்பிக்கையை இழப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை என அரசு இணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி மையத்தில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுவது பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை நிலவரத்தை இணையத்தில் பதிவிட்டால் தடுப்பூசி தேடி வரும் மக்கள் முன்பதிவு செய்து வர ஏதுவாக இருக்கும் பொதுமக்கள் என கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version