கடலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

கடலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழக்கடை, பூக்கடை என 50க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Exit mobile version