திருமலை ஏழுமலையான் கோயில் ஆஸ்தான மண்டப கடைகளில் தீ விபத்து

திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் செயல்பட்டு வந்த கடைகள் மூடப்பட்டிருந்தன.

இன்று அதிகாலை ஒரு கடையில் திடீரென தீ பற்றி எரியத்தொடங்கியது.

அங்கிருந்த ஊழியர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயில், ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version