வரும் கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2020 – 21ம் கல்வி ஆண்டில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா காலணிக்கு பதிலாக, ஷு மற்றும் இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்கப்பட உள்ளது. இதற்காக, சுமார் 67 கோடி ரூபாய் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில்லா ஷு மற்றும் சாக்ஸ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
ஏற்கனவே, 2018-19ம் கல்வியாண்டில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும், சுமார் 30 லட்சம் மாணவ, மாணவியருக்கு, சுமார் 56 லட்சம் ரூபாய் செலவில், விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டது. தற்போது கணக்கிடப்பட்டுள்ள உத்தேச மாணவ, மாணவியர் எண்ணிக்கையில், மலைப் பிரதேசங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.