ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவால் அதிர்ச்சி

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ரோகித் ராஜ் சிங் சவுகான் என்ற பயணிக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது உணவில் கரப்பான்பூச்சி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரோஹித் இது குறித்து உணவக ஊழியர்களிடம் புகார் செய்துள்ளார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததையடுத்து, அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பலர் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.

Exit mobile version