மகாராஷ்டிராவில் எங்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா வரும் – பாஜக நம்பிக்கை

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா வரும் என்று அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களை பிடித்தன. ஆனால், இருகட்சிகளிடையே ஆட்சி அதிகார பங்கீட்டில் முரண்பாடு அதிகரித்ததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் பாஜக – சிவசேனா கட்சிகள் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. இந்த கட்சிகளிடையே இன்னும் பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததால், ஆளுநரை சந்திக்கும் முடிவையும் சிவசேனா ஒத்திவைத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பாஜக – சிவசேனா இணைந்து ஆட்சியமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறினார்.

Exit mobile version