பிரியங்கா காந்தியின் அரசியல் வருகையை வரவேற்ற சிவசேனா கட்சி

பிரியங்காவின் வரவு, காங்கிரசுக்கு நல்ல பலனை தரும் என சிவசேனா தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்ட நிலையில் பிரியங்கா காந்தியின் வரவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் பிரியங்காவின் வரவு ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்தார். இந்த நிலையில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா, பிரியங்கா வரவால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலன் அடையும் என்று கூறியுள்ளது. இது குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இது ராகுல் காந்தி எடுத்த நல்ல முடிவு என பாராட்டியுள்ளதோடு,இந்திரா காந்தி குடும்பத்துடன் இந்த நாடு நல்ல உறவு கொண்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். சிவசேனாவின் கருத்து பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிவசேனாவின் கருத்தை பாஜக நிராகரித்துள்ளது.

Exit mobile version