மகாராஷ்டிரா ஆளுநருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்திப்பு

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகியதை அடுத்து, சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் கூட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கு உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவும் அவரது மனைவி ரஷ்மியும் ஆளுநர் மாளிகையில் பகத்சிங் கோசியாரியைச் சந்தித்துப் பேசினர். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நாளை மாலை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் மூன்று கட்சிக் கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். அதற்கு முன் மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

Exit mobile version