உலகின் 20 தொழில்நுட்ப பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் (forbes) பத்திரிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஷிவ் நாடாரும் அதில் இடம் பிடித்துள்ளார்.
கொரோனா பரவலின் காரணமாக உலகளவில் அனைத்து தொழில் நிறுவனங்களும் சரிவை சந்தித்து வருகின்றன. இருப்பினும் தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமே தற்போது வருமானம் ஈட்டி வருகிறது. உலகளவில் அதிக வருமானம் ஈட்டியுள்ள 20 தொழில்நுட்ப கோடீஸ்வரர்களின் பட்டியலை, பிரபல ஆங்கில இதழான ஃபோர்ப்ஸ் (forbes) பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் HCL நிறுவன தலைவரான ஷிவ்நாடார் இடம் பிடித்துள்ளார். 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட HCL நிறுவனத்தின் மூலம், நடப்பு ஆண்டில் 8 புள்ளி 6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளார். இந்த பட்டியலில் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) சுமார் 113 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி முதலிடத்திலும், 98 பில்லியன் டாலருடன், பில் கேட்ஸ், 2ம் இடத்திலும் உள்ளனர். ஆரக்கிள் (Oracle) நிறுவன தலைவர் லேரி எலிசன் (Larry Ellison) 59 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.