விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு – பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்!

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலி தளம் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அக்கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கௌர் பாதல் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாய மசோதாக்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறவு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல், தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இனியும் பாஜக கூட்டணியில் நீடிப்பது சரியாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வலியை மத்திய அரசு கொஞ்சம் கூட உணரவில்லை எனக் கூறியுள்ள அவர், விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, 20 ஆண்டுகளாக நீடித்து வந்த பா.ஜ.க. – சிரோமணி அகாலி தளம் கூட்டணி முடிவுக்கு வந்தது.

Exit mobile version