ஷீரடி சாய்பாபா நூற்றாண்டு விழா – ஷீரடி சாய்பாபா உருவம் பதித்த தபால் உறை வெளியிடு

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஷீரடி சாய்பாபா உருவம் பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.

பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டுவிழா நடைபெற்றது. இதனையொட்டி சாய் பாபா உருவம் பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வட்டார முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சம்பத் தலைமை வகித்து சிறப்பு தபால் உறையை வெளியிட, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதியரசர் கோமதி நாயகம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட பாபா பஜனைகளை பாடினர்.

Exit mobile version