சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் முழுமையாக மீட்பு!

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் ஒரு வார போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து மலேசியா வழியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்த ஜப்பான் நாட்டின் எவர் கிவ்வன் சரக்கு கப்பல், கடந்த 23 ஆம் தேதி எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது. ஆயிரத்து 300 அடி நீளமும், 2 லட்சத்து 20 ஆயிரம் டன் எடையும் கொண்ட கப்பல், கால்வாயின் குறுக்கே நின்றுவிட்டதால், அந்த வழியில் செல்ல முடியாமல் 350க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் தத்தளித்து வந்தன. இதையடுத்து, கப்பல் அடியில் மணலை அகற்றும் பணி நடைபெற்றது. மேலும், 10 இழுவை கப்பல்கள் மூலம், சரக்கு கப்பலை இழுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் சுமார் ஒருவார கால கடும் போராட்டத்திற்கு பின்னர், கப்பல் நீர்ப்பரப்புக்கு கொண்டு வரப்பட்டது. விரைவில் கப்பல் போக்குவரத்து சீரடையும் என சூயஸ் கால்வாய் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version