ஜப்பான் கப்பலில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மேலும் 10 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்த ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது.
முதலில் ஒருவருக்குதான் இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது. நேற்று இந்த வைரஸ் 10 பேருக்கு பரவியது. இன்று இன்னும் 10 பேருக்கு பரவி உள்ளது. மொத்தம் 21 பேருக்கு வைரஸ் தாக்குதல் உள்ளது. இவர்கள் எல்லோரும் அங்கே தனி அறையில் வைக்கப்பட்டிருந்ததும், எதோ ஒரு வகையில் எல்லோருக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனால் அங்கு நேரம் ஆகஆக வைரஸ் தாக்குதல் பரவிக்கொண்டே வருகிறது.  இவர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு போதிய மருந்து வசதிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நோய் தொடுதல் மூலம் பரவக்கூடியது ஆகும். அதேபோல் நோய் தாக்குதல் உள்ளவர்கள் தொட்ட பொருளை மற்றவர் தொட்டாலும் இந்த வைரஸ் பரவும். ஜப்பான் மருத்துவர்கள் கரையில் இருந்து சென்று அங்கு சிகிச்சை அளித்து திரும்பி வருகிறார்கள்.

Exit mobile version