தஞ்சாவூர் அருகே பட்டதாரி பெண் ஒருவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்
தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் வசித்து வரும் சபாபதி-தேன்மொழி தம்பதிகளின் ஒரே மகள் குறிஞ்சிமலர்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் குறிஞ்சி மலர் தொடக்க கல்வியை படித்தார், பின்னர் சென்னை சென்று தனியார் பள்ளியில் மேல்நிலை கல்வியை முடித்த குறிஞ்சிமலர் தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயிரி தொழில் நுட்பத்தில் பிடெக் 2018 ஆம் ஆண்டு படித்து முடித்தார் அதனைத்தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையில் இருந்து விடுபட்ட பிறகு தான் பிறந்த ஊரான பாதரக்குடிக்கு வந்தார்.
பின்னர் அழிந்து வரும் இயற்கை விவசாயத்தை காக்க வேண்டும் என்று முடிவெடுத்த குறிஞ்சிமலர் தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு தனது பாட்டி வீட்டில் தங்கி வேளாண் தொழில் புரிய ஆரம்பித்தார்.
வேளான் விவசாயத்தை காப்பதற்க்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினார் குறிஞ்சிமலர்.மேலும் பொள்ளாச்சியிலிருந்து தேக்கு மரக்கன்றுகளை வாங்கி 2 ஏக்கர் நிலப்பரப்பில் 1500 தேக்கு கன்றுகளை நடவு செய்து இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
பட்டதாரி பெண்ணான குறிஞ்சி மலர் தனது படிப்புக்கு தகுந்த வேலை எதுவும் தேடாமல் , அழிந்து வரும் வேளாண் இயற்கை விவசாயத்தை காக்க எடுத்துள்ள முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பலரும் அவர்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
விவசாய துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக குறிஞ்சிமலர் இயங்கி வருவது அனைத்து பெண்களுக்கு ஒரு உந்து சக்தியே ஆகும்.