கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு,ஒரே நாளில் 11 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை இன்று தொடக்கம் முதலே பெரும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலால், பல்வேறு நாடுகளில் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் கடந்த சில நாட்களாக காணப்படுகிறது.
இதனால், ஏராளமான முதலீட்டாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இன்று, சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டெண், 2ஆயிரத்து 919 புள்ளிகள் சரிந்து, 32 ஆயிரத்து 778 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதே போன்று, தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 868 புள்ளிகள் குறைந்து, 9 ஆயிரத்து 590 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு,பங்கு சந்தைகளில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில்,முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.சென்செக்ஸ் குறியிட்டெண் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 868 புள்ளிகள் குறைந்து, 9,590 புள்ளிகளில் நிறைவு