இன்றைய பங்கு சந்தை நிலவரங்கள்

இந்திய பங்கு சந்தைகள் முதல், உலக பங்கு சந்தைகள் வரை குறித்த  நிலவரங்கள், இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன..

மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 36 ஆயிரத்து 907 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி,120 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 10 ஆயிரத்து 871 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 7 ஆயிரத்து 962 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 281 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 493 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 953 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 20 ஆயிரத்து 625 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 580 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 2 ஆயிரத்து 922 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Exit mobile version