2020ல் திரும்பி வருவோம்… தெறிக்க விடுவோம்- வீடியோ வெளியிட்ட ஷேன் வாட்சன்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 12வது சீசனின் இறுதி போட்டியில் சென்னையை 1 ரன்கள் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது மும்பை. ஆனால் அன்றைய தினம் களத்தில் ஹீரோ ஆனது வாட்சன் தான்.

இறுதி போட்டியில் மும்பை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்த 150 ரன்களை விரட்டிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் கடைசி ஓவர் வரை போராடினார். ஆனால் மறுநாள் அணியின் மற்றொரு வீரர் ஹர்பஜன்சிங் பதிவிட்ட டிவிட்டர் பதிவில் பேட்டிங் ஆடும் போது காலில் காயம் ஏற்பட்டதை வெளியே சொல்லாமலும், அதன் வலியை வெளிக்காட்டி கொள்ளாமல் ரத்தம் சொட்ட சொட்ட அணிக்காக கடைசி வரை போராடினார்.

வாட்சனின் இந்த அர்ப்பணிப்பை கண்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், அவரை புகழ்ந்து தள்ளியதோடு மட்டுமல்லாமல் அவரின் ரத்தம் படிந்த ஆடையோடு விளையாடிய படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். இந்நிலையில் வாட்சன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார்.

இன்று வாட்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ரசிகர்களாகிய உங்களின் அன்புகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. இறுதிப்போட்டியில் துரதிஷ்டவசமாக கோப்பையை நழுவ விட்டோம். ஆனால் மீண்டும் அடுத்த வருடம் வந்து கோப்பையை வென்று தெறிக்க விடுவோம்” என கூறியுள்ளார்.

வாட்சனின் இந்த நன்றிக்கடனை எண்ணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Exit mobile version