ஷாஹித் கபூர் நடிக்கும் "கபீர் சிங்" படம் 2019, ஜூன் மாதம் 21 ஆம் தேதி வெளியாகும்

தெலுங்கில் சக்கை போடு போட்டு, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படம் தமிழில் ஏற்கனவே உருவாகி வரும் நிலையில், தற்போது பாலிவுட்டிற்கும் செல்ல இருக்கிறது.விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம், தமிழில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் உருவாகி வருகிறது. பாலாவின் ப்ரியமான நாயகன் விக்ரமின் வாரிசு துருவ் இந்த படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பாலிவுட்டிலும் உருவாகிறது. ஷாஹித் கபூர் நாயகனாக நடிக்க, கபீர் சிங் என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவே இயக்குகிறார். படத்தை தொடங்கும் போதே, வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, கபீர் சிங், 2019 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version