ஹார்மோன் ஊசி மூலம் குழந்தைகளுக்கு பாலியல் முதிர்ச்சி : குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை

சமீபகாலமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு போக்சோ சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

இந்தநிலையில் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஊசி மூலம் பாலியல் முதிர்ச்சியை ஏற்படுத்தும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேகனா காந்தி அனுமதி அளித்ததை தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Exit mobile version